பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நூற்றாண்டு வரையில் பிரெஞ்சு நாட்டிலே அயல்மொழிகளில் உள்ள நூல்களையெல்லாம் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து வந்தார்கள். அதன் பயனாக, பிரெஞ்சு இலக்கியம் வலுவும், நுட்பமும், மேன்மையும் பெற்று உலக இலக்கியங்களிலேயே முதலிடம் பெற்று நிற்கிறது. வின்சுலோ கூறியபடி, தமிழ்க் கவிதை கிரேக்கக் கவிதையைக் காட்டிலும் மிக்க துல்லியத்தை யும் மெருகையும் பெற்றிருந்தபோதிலும், தமிழ் உரைநடை வேண்டிய அளவு முன்னேறவில்லை. தமிழ்நாடு அரசு தீட்டியுள்ள இந்தத் திட்டத்தின் விளைவாக வெளிவரப்போகின்ற இதைப் போன்ற நூல்கள் தமிழ்மொழியின் மேனியிலே புதிய ரத்த ஓட்டத்தையும், தமிழ் விந்துவுக்குப் புதுத் தென்பையும் ஊட்டி, எதிர்கால இலக்கியப் படைப்புகளுக்குப் புத்துயிரும்

புத்தார்வமும் நல்கும் என்று நம்பலாம்.

எஸ். மகராஜன்

தலைவர் தமிழ்நாடு சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு.