பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மரிஸ் ஸ்க்லாஸ் லத்வியா

(19. 1940)

நிலவுல கென்னும் உலவுறும் கோளில் உள்ள மாந்தரை உரைப்பின்முந் நூற்று ஐம்பது கோடி மக்கள் ஆவர்; இவருள் இலாத்துவியர் பதினைந்து இலக்கமே பெருங்கடல் அதனில் ஒருதுளி ஆவர்...... சின்னஞ் சிறிய இந்த ஒருதுளி பென்னம் பெரிய பரிதியைப் பற்றிப் பாடல் புனைந்திடத் துணிவது தகுமா? எனினும், கதிரவன் இன்னொளி நலத்தால் இலாத்துவிய நாடு மாட்சிமை கொள்ளுமே. எனினும் செங்கதிர் இன்கனற் சிறப்பால் இலாத்துவிய மக்கள் வேட்புற்று வாழ்வரே. மண்ணையும் கதிரொளி மாண்பையும் புகழ்ந்து பண்ணிசைத் திடுவோர் பாடலைக் கேண்மின்:

‘விண்ணின் ஒளிமிகு விளக்கே பகலைஅனுப்பு வெயிலுக்குப் பின்மாலை வேளையில் மறைவாய் என்றும்உழைப் புக்குஎங்கள் குருதியை மகிழ்செய் இனிதுறங்கிட அமைதியும் ஒய்வும் தருவாய்.”

36