பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

நிக்கோலாய் தம்தினோவ் பர்யாட்டியா,

உருசியக் கூட்டரசு (R. 1932)

புல்வெளிப் பாடல்

பரந்தபுல் வெளியில் நுழைந்துசெல் வதைப்போல் வாழ்வுப் பாதையில் ஆழ்ந்துசெல் கின்றேன்...... நான்ஏன் விரைய வேண்டும்? ஏன்நான் மானாய் ஏகிட வேண்டும்? சாலை ஒரக் கல்மேல், சரிவினில் சற்று நின்று உட்கார்ந் தால்என்? தடையும் நிறுத்தமும் இடையூறும் இன்றிப் படர்ந்துள வழியினைப் பார்த்துவந் தால்என்? இயலாது என்றால் நிற்க இயலாது. தொடுவான் முகட்டில் கதிரவன் எழுங்கால் அவனை எதிர்கொள விரைகின் றேன்நான். அரும்பெரும் பரிசாய் விரிவுலகு அளித்த இந்தப் பிறவியை எந்த வகையிலும் ஏய்த்துப் போக எண்ணிட மாட்டேன். அதற்குள வழியில் அதுஏ கட்டும் இறுதி வேளை நெருங்கி வருகையில் மலர்ந்த விழியுடன் நலஞ்சால் உலகின் அழகையும் மகிழ்வையும் அடிவரை பருகுவேன்.

39