பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிமியோன் தானிலவ்

(o. 1917) யகூடியா,

உருசியக் கூட்டரசு

என் பெருமை

அடிக்கடி நீண்ட நெடுவழிச் செல்வேன்; அயலூர் பலவிடைத் திரிவேன், கடுவழி, நல்வழி, அரண்மனை, குடிசை கருதாது எங்கணும் மகிழ்வேன்.

என்வழிப் போக்கின், போதெலாம் என்றன் இனியநற் குடியினைப் பற்றி, என்உழைப் பேற்கும்.அம் மண்ணினைப் பற்றி, எவர்க்கும்.நான் விடையளித் திடுவேன்.

தாயகப் பெருமை கூறிடக் கேட்பார் தாயகம் முழுதும்கண் டவர்போல் மாயமோ என்று மருட்கைஉற் றிடுவார் மனத்தினில் ஆர்வமே நிறைவார்.

காட்டினில் பணியில் வேட்டைகள் ஆடி மீண்டவன் போல் எனைக் கருதி வேட்புறும் அன்பில் வியப்புடன் வீட்டில் விருந்துண வருகென அழைப்பார்.

41