பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கப் புதையல் வைத்திருப் பவன்போல் மகிழ்வுடன் எனை.அவர் பார்ப்பார்: காணிய என்ஊர் அழகெலாம் சுற்றிக் காட்டினேன் போல்.எனை மதிப்பார்.

பற்று.அது கண்டென் தாயகப் பற்று பன்மடங் காய்அவண் உயரும்! உற்றதாய் நாட்டை, உறவினை நினைந்தே உள்ளமும் பெருமையில் திளைக்கும்.

பணி

இக்குளிரை இன்பனியை ஏத்திடுவேன் நானே இப்பணியின் ஊடுபிறந்து எழுந்தவனும் நானே.

வாழ்வினிமை ஆகிடநான் திளைத்ததும்இப் பணியே, சூழ்ந்துநடை பழகிஅடி

தோய்ந்ததும்இப் பணியே.

மென்துகிலின் திரைஎனவே என்முகத்தில் மேவும், முன்னியே நான் பள்ளிசெலின் முகத்தில்பனி துாவும்.

கம்பளியின் மெத்தைபோலக் காலில்முத்தம் இடுமே, வம்புசெயும்! உருகிடவே மறுத்தெனையே தொடுமே.

42