பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டிகனி

விடைபெறு கிறேன் என்றன் வருங்காலக் கணவனே!

விரும்பும் உன் முத்தத்தை அறியாமல் போகிறேன்.

விடைபெறு கிறேன்.எனக் கொருபோதும் பிறவாத வேட்புமிகு மகனுக்கும் பிரியாவிடை கூறுவேன்.

என்காத லேஇங்குக் கொண்டுவந்த தென்னை

ஏகவேண்டும் வழிதனையும் அதுவே காட்டிடும்

பொன்போது வைகறை நடுங்குகுளிர் வாடைஎன்

உள்ளங்கைப் போதினில் புகுந்துநலம் காணுமே.

மாண்டஎன் உடன்பிறந் தோர்களை நள்ளிரா

வேளையில் மண்ணினில் புதைத்திட வேண்டியே

மீண்டிட வேண்டும்நான் மீண்டிட வேண்டும்நான்

ஆயிரம் முறைக்குமேல் மீண்டிட வேண்டுமால்.

தீய்ந்திட்ட நிலமீது சாம்பலின் ஊடுநான்

எரிந்திட்ட செம்மணல் மீதிலும், மென்மையாய்

வாய்த்துமே மழைமாறித் தோய்ந்திட்ட களிமண்ணில்

வழுக்கிடும் நிலத்திலும் நான்செல்ல வேண்டுமே.

படையின்றி மீளுவேன் காலணி இன்றியே

பாதைகள் யாவையும் கடந்துநான் செல்லுவேன்

உடைகின்ற அவர்களின் சட்டங்கட் கஞ்சிடேன்

உண்டாக்கி னோர்எனை வெறுக்கட்டும் ஒடுக்கட்டும்.

ஏனெனில் அறிகுவேன் ஆயிரம் முறைஎனைத்

தண்டித்த போதும்அவர் தீர்ப்பிட முடியாது, ஏனெனில் அவர்க்குநான் உட்பட்டு விதைத்தவயல் எங்கணும் தோன்றியே உலாவிடும் ஆவிநான்.

போர்க்களங் களிலேநான் வெள்ளையர் கறுப்பராம்

உடன்பிறந் தோர்களைப் புதைக்கிறேன் இடுகாட்டில் ஆர்க்கின்ற கடலும்இம் மண்ணுலகும் கொடியவர்

ஆட்சியில் அல்லலில் முனகிடும் காலம்வரை

4 5