பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நூல் அறிமுகம்

‘One Hundred Soviet Poets’ arcrgylb என்னும் கவிதைகள் அனைத்தையும் கவிஞர் த. கோவேந்தன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். பாடல்கள் சோவியத்து மக்களுடைய உணர்ச்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. கவிஞர் த. கோவேந்தன் அவர்கள் பாரதிதாசனுக்கு நெருங்கிய நண்பர் பல கவிதை நூல்கள் எழுதியவர். "தோழனைப் பாடுவேன்" என்னும் இலெனினைப்பற்றிய கவிதை நூல் ஒன்றை எழுதி, அதற்காகச் சோவியத்து நாடு நேரு இலக்கியப் பரிசை 1972-ல் பெற்றவர். அவருடைய தமிழாக்கம் தமிழ் மக்களுக்குப் பயனுள்ளதாகவிருக்கும். இந்த நூலை அழகாக அச்சிட்டு, விரைவாக வெளிக்கொணர்ந்த தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ரா. குழந்தைவேலு அவர்களுக்கும், அவர்களுடைய அலுவலகத்தைச் சார்ந்த அனைவருக்கும் எங்கள் வல்லுநர் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ். மகராஜன்

தலைவர்

தமிழ்நாடு சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுகர் குழு