பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மிகையில் துஷின் உருசியக் கூட்டரசு (S. 1916)

இறவானத்தில் அடைக்கலாங் குருவிகள்

1 அறிவுடைமை மடமை.எது எனக்கே ளுங்கள், நேர்மையுடன் உண்மையுடன் விடை.அ வரிப்பேன். வெறிதே நான் உன்னைமிக விரும்பு கின்றேன்,’ விளம்பிய அம் மாதரையான் அறிந்தி லேனே.

எங்கிருந்தோ அவர்வந்தார் தெரிய வில்லை ஏழையரா. செல்வரா அறியேன் அஃதும். இங்கினிய நன்மையினை நோக்கு வோர்தாம் இரும்புலவர்; மெய்யறிஞர் அவர்என் பேனே.

உங்கள்முதல் இடம்பற்றி வினாக்கள் தோன்றும் என்றாலும் முதல்தொடக்கம் அதுவே யாகும். பங்குற்ற நரம்புகளோ புல்லின் நீண்ட வேரினைப்போல் நெஞ்சுக்குள் ஆழ்ந்து பாயும்,

2 இன்னொளிப் பொழுது புலர்ந்தது என்றே இறப்பினிலே எவ்வளவு நேரம் உரத்து அழைக்கும் குருவிகளே, மின்னொளிப் புறாப்போல் கருங்கோல் குறிஞ்சி பூத்திடுமே மேவும் நாளின் வாழ்வும் குப்பைச் சாம்பலிலே.

47