பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோய்ந்துறை பணியின் கல்லறை இருந்து

துலங்கும் அரசின்பால்

பாய்ந்திடும் குண்டால் அன்று, பணிவால்

முத்தம் பதித்ததனால்,

வாழ்வின் களிப்பும் பொங்கிச் சுரந்திடும்

வகைபோல் அம்மரத்தில்

சூழ்ந்துள் விழிப்பில் வாழ்வெதிர் நோக்கிச்

சுடர்ந்து நின்றதுவே.

வேட்டைக் காரனும் வாய்ப்பேச் சற்று

வியப்பால் ஆழ்ந்தபடி,

ஊட்டம் மிகுந்த மரத்தின் அடியில்

அவனின் சிறுகுண்டு

துளைத்த இடத்தில் சொளசொள வென்றே

சுரக்கும் சாறருவி

விளைக்கக் கண்டான், நின்றான் நெஞ்சின்

வறட்சி மறந்தனனே.

நேற்றைய கிழமைக் காலத்து அன்பின்

நெருக்க மானவரை

ஆற்றிடும் அன்பால் அணைதல் போல

அணைந்து பிணைந்தானே.

மேலும்அப் பிர்ச்சு மரத்தின் பால்அவன்

மேவும் செயல்அறியா

ஏலஓர் காசும் அவனிட மிருந்தே எதிர்பார்த் திடவில்லை.

அடிமரத் தூற்றின் ஒவ்வொரு துளியை

அவன்வாய் உறிஞ்சையிலே

வடிவுடை இளமை வளமைத் துளியை

இழக்கும் அம்மரமே.

50