பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும், வளர்ந்திடும் ஒன்றும் நிகழா ததுபோல்) மண்புழு வோடும் எண்ணிடல் ஆகுமோ? (இரண்டாய் நறுக்கு சிரித்துயிர் வாழும் ஒன்றுமே நிகழா ததுபோல்) இயன்றவர் என்னிடம் இயம்புக; மாந்தனைக் காட்டிலும் வன்மை மிகுந்தும் வன்மை குன்றியும் இருப்பவர் யாரோ? இருப்பினும் அன்னவன் நொறுங்கும் நொய்மைப் பாண்டம் போன்றவன். ஒருதலை அசைப்பில் உயிரை இழப்பவன், இறைவ னுக்கே தீர்ப்பு:அளித் திடுவான், துறக்கம் நரகம் இரண்டையும் எதிர்த்தே கிளர்ச்சிசெய் திடுவான். உதை, அடி தாங்கிப் பகைபல எதிர்ப்பான். இத்தகு மாந்தன் ஒருகா லத்து விதியின் கையில் விளையாட்டுப் பொருளாய் அடிமையாய்க் கிடந்தவன், அழுகி நாறும் அடவிக் குகையில் அரும்பசி நீங்கிப் புடவியை வெல்லப் புறப்படு மகன்.அவன் இடர்களி னின்றே இன்பத்தை நோக்கி நடைதள ராமல் நடப்பவன் தானே.

54