பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூட்டிடிலோ கடிவாளம் போட்டுக்கடித் திடுமே கூட்டிநுரை கொப்புளிக்கக் குதப்பிடும்தன் வாயை. ஒட்டிடுமுள் குத்திடவும் ஓங்கிஎழும் வானில் காட்டியவிண் மீன்தலையில் கால்களைவைத் திடுமே.

செழித்தபசுஞ் சமவெளியில் சிலிர்த்தகொழும் புல்லை வளப்பமுற மேய்ந்துவளம் பெற்றதென்றன் குதிரை; பொழியுமலைப் பணிச்சுனையின் புனலிணைக்கண் டோடி விழைந்தினிது பருகிநலம் படைத்ததும்என் குதிரை!

கல்லைநிகர் நெஞ்சுறுதி, எஃகொத்த கால்கள், நல்ஒளிகொள் பளிங்குநிகர் தூயஒளிக் கண்கள், வல்லவனாம் தேசிங்கு மன்னன்பரி போல எல்லையிலாத் தொலைவினையும் ஈர்க்கும்ஒரு கணத்தே.

தாலிசியன் மலைக்குதிரைத் தனிப்புகழோ பெரிதே! ஆலித்துஎழும் பரிவீரர் கடிவாளம் இடுமின், ஞாலம்இதில் மக்கள் பெயர் காக்கும்ஒரு வனையே கோலமலைக் குதிரையும்தன் தலைவன்எனக் கொளுமே.

56