பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறர்காணாது ஒப்பாரி பெறாது சாவின் பெருவழிக்கே நான்அணியம் ஆகும் போதில் உறவுறும்என் தாய்மொழியில் இருவர் யாரோ உரையாடும் இனியமொழி செவியில் கேட்டேன்.

பிறர்அறியா மலைப்பிளவில் சாகின் றேன்.நான், பெருமகிழ்ச்சி யோடுஇருவர் களிப்புப் பொங்கத் திறம்வாய்ந்த அசனுடைய தந்தி றங்கள் அலிசெய்த சூழ்ச்சிகளைப் பேசிச் சென்றார்.

தாய்மொழியாம் அவார்’மொழியைப் பேசக் கேட்டுத் தலையூற்றாய் வலிமையெலாம் மீளக் கண்டேன் போய்அறிஞர் வாய்கேளா மருந்தீது ஆகும், மருத்துவர்கள் காணாத களிம்பீது ஆகும்.

நீள் உலகில் அவரவர்க்கிங்கு ஏற்ற வண்ணம் நிலவும்அவர் தாய்மொழிகள் நலஞ்செய் யட்டும், நாளை என்றன் அவார்’மொழிதான் அழியு மாயின் நான்இன்றே இறந்திடுவேன் கணமும் வாழேன்!

அரசியலுக்கு உகந்தமொழி இலைஆ னாலும் அதுபற்றிக் கவலைஉறேன், நான்வி ரும்பும் உரமான “அவார்’மொழிதான் எனக்கு உவப்பாம்உலகத்தில் அவார்’மொழிதான் உயர்வு எனக்கே!

மூதறிஞர் முகமதுவின் பாடல் எல்லாம் மொழிபெயர்ப்பி லாஎங்கள் மக்கள் கற்பர்? ஒதும் அவார்’ மொழியினிலே எழுது கின்ற ஒருகடைசி எழுத்தாளன் நானே தானா?

இவ் உலக வாழ்க்கையினை விரும்பு கின்றேன், எல்லையற்றுப் பரந்துள்ள உலகை அன்பின் செவ்வியொடும் நோக்குகின்றேன் அனைத்தின் மேலாய்ச் சோவியத்தை அவார்’மொழியால் புகழு கின்றேன்.

58