பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

ஃபிக்ரெட் கோஜா அசர்பைசான்

(0. 1938)

நான் ஓர் உழைப்பாளி

நான்ஒர் உழைப்பாளி, என்றன் தோளும் முதுகும் வலிமையும் தசையுமாய் வாய்ந்தவை. மண்ணின் குடல்களைப் பிணைப்புக் கயிற்றால் அணைத்துப் பிடிக்கிறேன். எஃகினை இணைக்கிறேன், இயக்குகின் றேன்சுமை தூக்கிகளை. காண்பீர் மீண்டும் காண்பீர்! - ஆற்றின் ஆழத் தடத்தில் எழுப்பிடு கின்றேன் கற்சுதைத் தூண்களை; அவற்றின் உச்சியில் அடுக்கடுக் காகப் பாலம் அமைக்கிறேன். என்றன் கைகள் எஃகு கைகள், எஃகினை யேஅவை வார்த்தளிக் கின்றன. தண்டவா ளங்களைத் தாம்உரு வாக்கும்; நிலக்கரிச் செல்வம் அகழ்ந்து எடுத்திடும்; மாந்தரின் உறைவிடங்களை இம்மண் உருண்டையின் மீது

60