பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழித்தெழுந்த தம்மா! அருந்தொலைவு காரணமோ? அயர்ச்சிமிகு வழிவருத்தம் தானோ? அடுகதிர்க்கும் சாலைக்கும் இடையில்ஒரு முகில்புகுந்த தாலோ? கடுகளவும் எதிர்பாரா வகையில்,உளம் கண்டுகொளும் முன்னர்க் கழுகொன்று பாய்வதுபோல் பாட்டுணர்வும் காதலதும் பாய்ந்தே கதுமென்றன் நெஞ்சத்தை நன்றாகக் கவ்விக்கொண் டனவே. கடந்தவழி கடைசிமுனை திரும்புகையில் நிகழ்ந்திது தானோ? நண்பகலை நினைக்கின்றேன்: வெயில்கொடுமை என்னஎன்று சொல்ல! நறும்பொழிலில் செம்மலர்கள் வாட்டமுற்றுத் துவண்டுவிழும் அந்தோ. நண்பகலும் தாழ்ந்ததுவே: குளிர்ந்துஇனிது மாலைமகிழ் செய்யும் நறுமலர்கள் வாட்டம்எலாம் தவிர்ந்துஇனிதே நகைசெய்தல் காணாய். இருந்தும்என்ன! பகற்பொழுது தீர்ந்ததுஇனி என்னநினைத்து என்ன? இருந்துறங்கும் வேளைஇது. புத்துணர்ச்சி எய்தவழி இல்லை. இருந்தும்இவன் சுவர்.அருகில் கரியநிழல் எழுந்துபர விடுதே. இதுவேதான் நல்விளைவு நற்பரிசும் விடுதலையும் ஆகும். நிழல்ஒளியில் செம்மலர்கள் தம் தலையை நிமிர்ந்தழகாய் நீட்டும். நிறந்திகழும் இதழ்வட்டம் மங்கலிடைத் தெளிவுறவே தெரியும்.

64