பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்காலத் துக்கோ இருபுறச் சுமையிலும் நேர்பட ஒர்இடம் இல்லையடா! நெகிழ்ந்தொரு பக்கம் சுமைகுறை வானால் மறுபுறும் சுமையது கூடிடுமே. உகப்புறத் தொடக்கத் திணிலும் முடிவிலும் ஒத்த நடையினைக் கொண்டிடுக. ஏன்எனில், பின்னர்ச் சமநிலை தன்னை ஒழுங்குறச் செய்தல் மிகஅரிதே.

நிகழ்பொழுது ஒடி மறைந்திடும்; அதனை நிறைசெய் துலாக்கோல் நிறுத்திடுமா? நேரும்.இவ் வுண்மைநீ கொள்ளினும் தள்ளினும் நிலையாம் அதுவே உண்மையடா! நிகழ்பொழுது என்பது நீயின்றி வேறிலை, நெஞ்சம் அறிய உணர்ந்திடுக. ஏனெனில், இவர்பவன் நீயே, ஒட்டகம் இயக்கு பவனும் நீஅன்றோ !

66