பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள்துயர்க்கு இரங்கிடவே அங்குஎவரும் இல்லை; எமைத்தேற்ற ஒருகையும் முன்நீள வில்லை; அங்குப்பின் கண்பறிக்க மின்னிஇடி முழங்கி அரத்தம்தோய் முகம்வீங்கிப் போர்அரக்கன் வந்தான்!

பலிவேட்கை கொண்டஒரு பண்டையநாள் பூதம் பசிதீர்க்க எழுந்ததங்கே! சினவெறிக்கூத் தாடிக் கொலைவெறியும் கொடுநெருப்பும் தலைவிரித்துப் பாய்ந்த கொடுந்துயர நாடகத்தை நடத்திற்றே அம்மா!

தீமைமிகும் அக்கதையை மீண்டும்எடுத் துரைக்கத் தேவையில்லை, கல்லறைப்புல், படைஞனிலாச் சட்டை, வேம்உளத்தால் நரைபெற்ற தாயின்துயர் எல்லாம் வெட்கமுறும் கொடுஞ்செயற்குச் சான்றுகளாய் நிற்கும்.

துயர்ப்புயல்தான் ஒய்ந்ததுவே. ஆடுகின்றார் சிறுவர்; தொழில்புரியும் கைகள்,மனம் தொலைநோக்கிப் பாயும். வியனுலகில் யாம்யாவர், எக்குறிக்கோள் நோக்கி விரைகின்றோம் என்பதிலே ஒளிவேதும் இல்லை.

தார்த்துரஃபி அயல்நாட்டில் காப்புற்ற செருக்கால் தப்பெண்ணப் பொய்மைகளை உமிழ்ந்தாலும் நாங்கள் சாற்றுகிறோம்: வெறுங்கையால் இவ்வுலகு செய்தோம்! தாவும்.அதன் விரிவெல்லை விண்வெளிக்கும் அப்பால்.

மெய்மையிது; தெளிந்ததிது; எம்வாழ்வே சான்றாம். விரித்துரைத்தால் ஏதும்இலா வெறுமையினில் தொடங்கித் தெய்வத்தை விதியதனைச் சிறிதும்நம் பாமல் சிறுதுணையும் இல்லாமல் வளர்ந்துவெற்றி பெற்றோம்.

68