பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்பச்சுப் பொறியுடனே ஆர்வம் உள்ளோர்

வரிவரியாய்ச் சொல்லறுத்து வீழ்த்தி விட்டார்.

சேர்த்தெடுத்த அச்சிட்ட பக்கங் கள்தாம்

செம்மணிசேர் கோதுமையின் கதிர்க ளாமே.

விதைப்புமுதல் அறுவடையின் கால மட்டும்

வித்தும்.அதன் வாழ்வதனைக் காண்பா யானால்

அதனைப்பின் காலம்எனும் ஆலைக் கல்லில்

அரைக்கும்வன் கொடுமையினை அறிவா யானால்

வேகவைக்கும் அடுப்பு:அனலுக்கு உள்ளே இந்த

விளங்காத பெரும்புதிர்தான் மறைந்தி ருக்கும்......

ஆகநீ விதைத்தும்பின் களைப றித்தும்

அறுத்தரைத்தும் முயற்சிபல செய்த பின்தான். ....

இவ்வெளிய அடக்கமிகும் கோது மையும்

எழில்வானின் நிலவொளியின் துகளாய் மாறும்.

செவ்வினிய சியார்சியரின் திரண்ட பேச்சும்

சீருயிர்க்கு வாய்த்தநல்ல உணவா கும்மே.

வாழ்வப்பம் இங்குளது, பழமை யோடு

வளர்புதுமைத் தன்மையது! பகிர்ந்துண் போம்நாம்.

ஆழ்ந்தென்னோடு இதையுண்டு தெரிந்து கொள்வீர்

ஆன்மாவை உடலைவலுப் படுத்தும் கொல்லோ?

கடுமைமிகு சொல்லப்பம் இந்த அப்பம்,

கடந்தபல செயல்காட்டும் சான்றாய் நிற்கும்.

சுடச்சுடநாம் உண்ணும்.உண்மை அப்பம் போலச்

சூடாக இதனையும்நாம் பகிர்ந்துண் போமே.

கொடிமுந்திரி அறுவடைக் காலமும் இரவும்

கொடிமுந்திரிக் காலம்! கொடிமுந்திரிக் காலம்! கூடும்.அய லார்க்குதவும் இன்பத்துள் இன்பம்! கொடிமுந்திரிச் சாறுபொங்கி கோடி பாயுமே கொடிமுந்திரித் தாழிஎலாம் நிறைந்து வழியுமே.

70