பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

முமின் கனாத்தவ் தாஜிகிஸ்தான்

(19. 1932)

என் மரபுரிமை

வஞ்சக் கொடுமையை அறிவியலாய்

வாழ்தொழி லாக்கிய ஒருகுயவன்

செம்பாதி உலகைக் கைப்பற்றிச்

சேர்த்தான் தன்கிளை நுகர்வதற்கே.

உலகின் உயரிய மேற்பரப்பும்

ஒப்பில் செல்வ அடிப்பரப்பும்

வளஞ்சேர் தந்தையின் சொத்துகளால்

வாழும் கயவர்பால் சிக்கினவே.

விலங்காண் டியைப்போல் ஒருவரைமற்று

ஒருவர் வேட்டையில் வீழ்த்தினரே.

பலத்தால் உடன்பிறந் தோன்குருதி

பருக வேட்டனன் உடன்பிறந்தோன்.

ஆயினும் எனக்கோ என்தந்தை

அரியஇவ் வுயிரே சொத்தாக

ஈயப் பெற்றேன் உயர்ந்ததுதான்

எனினும் இன்னல் மிகுந்ததுவே.

72