பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

நெடுஞ்சாலையைக் கடப்பதற்கென்று, ஆங் க | ங் .ே க. கோடிட்டுக் காட்டியுள்ளார்கள்.

சென்னையிலும் சில இடங்களில் அப்படி உண்டு. ம்ே. ஊரில் அவ்விடங்களில் காவல் துறையினர் ஒருவர் இருந்து முறைப்படுத்தி அனுப்ப வேண்டும். இல்லாத போது, மக்கள், சட்டென்று, குறுக்கே பாய்ந்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட சிக்கல்களே மாஸ்கோவிலோ, பிற சோவியத் நகரங்களிலோ காணவில்லை. கண்ட இடத்தில் சாலேயின் குறுக்கே, கடப்பதில் நமக்கிருக்கும் உரிமை, அவர்களுக்கில்லை. கோடிட்ட இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்கப் பழகிக் கொண்டுள்ளார்கள் சோவியத் மக்கள். அவ்விடங்களில் அநேகமாக, கில்" செல்' என்று ஆணையிடும் மின் விளக்குகள் இருக்கும். அவ்விளக்குகள் செல் என்று ஒளிவிடும் போதே, சாலையைக் கடப்பார்கள்.

இரவு நேரத்திலும், மயக்கத்தாலோ, பனிக்கு அஞ்சி ஓடுவதாலோ, கடக்கக் கூடாத இடத்தில் கடந்து ஒடுவோரைக் காணும் நற்பேறு எனக்குக் கிட்டவில்லை.

சாலையின் இருமருங்கிலும் போவோர், வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இரு திக்கிலும் ஒடும் வாகனங்களைக் கவனித்தேன். பெருஞ் சாலைகளில் ஒவ்வொரு பக்கமும், மூன்று வண்டிகள் ஒடலாம். பல தெருக்கள் பக்கத்திற்கு இரு வண்டிகள் ஒடத் தகுதி யுள்ளவை. பக்கத்திற்கு ஒர் வண்டி மட்டுமே ஒடக் கூடிய குறுகிய தெருக்கள் இல்லாமல் இல்லை. மாஸ்கோ பழைய நகரமாயிற்றே!

பெருஞ்சாலைகளில் ஒவ்வோர் பக்கமும் மூன்று வண்டிகள் ஓடுவதற்கு, கோடிட்ட பாதைகள் உள்ளன: ஒரு கடத்திலிருந்து, மற்ருேர் தடத்திற்கு, சட்டென்று;