பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

F o

105

மாறி, முட்டிக் கொண்ட வண்டிகள், மூன்று பயணங் களின் போதும் என் கண்ணில் படவில்லை. "யார் அப்பன்

'வீட்டுச் சொத்து, சாலேத் தடம்" என்று நடுத் தெருவில்

நின்று, வழக்காடும் வல்லவர்களேயும் அங்காட்டில் நான் காண முடியாமற் போயிற்று.

தடம் மாறும்போது, முன் கூட்டியே போதிய அளவு மின் விளக்கைச் சிமிட்டிக் காட்டிய பிறகே, மாற்றி ஒட்டு வார்க் ள் வண்டியை. போக்குவரத்து அடையாள ஆணேயை மீறிப் பறந்து சென்று, யார் மேலாவது மோதியதையும் பார்க்கவில்லே நாங்கள்.

கடப்போரும் ஒட்டுவோரும் எவ்வளவு ஒழுங்காக, நடந்து கொள்கிருர்கள்! சாலே விதிகளே செயல்படுத்து வதில் காட்சண்யம் காட்டாமல், கண்டிப்பாக இருப்ப தால் இவ்வளவு ஒழுங்கு வந்துள்ளது. பொதுமக்கள் நமக்கு வாக்களித்து நம்மைப் பெரியவர்களாக்குவோர் ஆயிற்றே என்று தாட்சணியப்பட்டால் ஒழுங்கு வளராது. தாட்சணியம் உயிர்களுக்கு ஆபத்து. சோவியத் மக்கள் ம்ற்றவர்களுக்கு இடையூறின்றி நடந்து கொள்கிருர்கள்; இதுவன்ருே நாகரீகம். இப்படி வியந்து கொண்டிருக் கையில், எங்கள் மோட்டார் கார், ஒர் மேட்டின் மேல் ஏறுவதை உணர்ந்தோம். -

"அதோ: எதிரில் தெரிகிறதே, பெரிய கட்டடம்! அதுவே மாஸ்கோ பல்கலைக் கழகம். இப்போது நாம் ஏறும் இக் குன்றிற்குப் பெயர், லெனின் குன்று. ஏழு குன் றுகளின் மேல் அமைக்கப்பட்டது மாஸ்கோ நகரம், அந்த ஏழு குன்றுகளில் ஒன்றே, லெனின் குன்று. ல்லாடிமீரின் விளக்கம் முடிவதற்குள் குறுக்கிட்டேன். இப் பல்கலைக் கழகத்திற்கு, லெனின் பெயரை வைத்திருக்கிருர்களா?" என்று கேட்டேன்.

சோ-7