பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

'இல்லை. இக் குன்றிற்கு மட்டுமே லெனின் பெயரை இட்டிருக்கிருர்கள். மாஸ்கோ பல்கலைக் கழகத்திற்கு, மைக்கேல் லொமனசோவ் என்பவர் பெயரை வைத்திருக் கிருர்கள். இது பதில். 藝

"அப்படியொரு பெரிய அரசியல் புள்ளியைப் பற்றி நான் கேள்விப் பட்டதில்லையே." என் உரை.

"அவர் அரசியல் புள்ளியல்ல; அறிவியல் மேதை. பதினெட்டாம் நூற்ருண்டில், உலகப் புகழ் பெற்று விளங்கிய அறிவியல் மேதை. அவரே.மாஸ்கோ பல்கலைக் கழகத்தை அமைத்துக் கொடுத்தவர்' என்ருர் வ்லாடிமீர்.

மாஸ்கோ பல்கலைக் கழகத்தை நிறுவிய மைக்கேல் லொமனசோவ் அறிஞர் மட்டுமா? இல்லை. சாதனையாளரு மாவார். அவருடைய பிறப்பும் வளர்ப்பும் வாழ்க்கையும்

  • +&)ö)JULJIT&T 6-JOG)/ .

லொமன சோவ், மன்னர் மரபினரல்லர்! கிலப் பிரபுக்கள் குலத்திலும் பிறக்கவில்லை. செல்வர் விட்டி லாவது பிறந்தாரா? இல்லை. மாங்கரத்திலாவது பிறந் தாரா? அதுவும் இல்லை. பின் எங்கே பிறந்தார்? யார் வீட்டில் பிறந்தார்? -

ஆர்க் ஏஞ்சல் என்ற நகரத்திற்கு அருகிலுள்ள டெனிசூகா என்ற பட்டிக்காட்டில் பிறந்தார். அங்கேயும் ஏழை வீட்டில் பிறந்தார். இதோடு கின்றதா அவர் செய்த பிழை. இல்லை. போயும் போயும் ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தார். அக்கால இரஷ்யாவில் மீனவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள்; கல்விக் கூடங்களி லிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்; அக்கால இரஷ்யக் கல்வியைப் பொருத்த மட்டில், அங்கு ஒருவகையான, சாதி வேற்றுமை நடைமுறையில் இருந்தது. அரச குடும்பங்கள், அதிகாரிகளின் குடும்பங்கள், .பிரபுக்க்ள்