பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

இதழ்கள் இவரவழைக்கப்படுகின்றன. இதைக் கேட்டு சிம்ப்க்கம் போட்டு வீழ்ந்து விடாதீர்கள். s

முப்பத்திரெண்டாயிரம் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாலாயிரம் பேர்கள் உள்ளார்கள். இவர்களில் ஐந்துாறு ஆசிரியர்கள் பேரறிஞர் - அதாவது டாக்டர்’ பட்டம் பெற்றவர்கள். சோவியத் ஒன்றிய அறிவியல் கழகத்தின் உறுப்பினர்களாக இருக்கும் கிலைக்கு உயர்ந் துள்ள எழுபத்தொன்பது மேதைகள் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் வேலே செய்கிருர்கள்.

சோவியத் காட்டு ஆசிரியர்கள், பாட திட்டத்தில்

உள்ளவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு, தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதுவதில்லை. புதுப் புது நூல்களேயும் இதழ்களையும் படித்து விட்டு வந்து, அவற்றிலுள்ள தகவல்களேயும், உரிய நேரத்தில், உரிய அளவு, கலந்து கொடுப்பார்கள். அதோடு நிற்பார்களா? இல்லை. தனியாகவோ, குழுவாகவோ, பற்பல பொருள் பற்றி ஆய்வுகள் கடத்துவார்கள். ஒன்று முடிந்ததும் மற்ருெரு ஆய்வினை மேற்கொள்வார்கள். சோவியத் ஆசிரியத் தேனிக்கள் இவற்றையெல்லாம் நூல்களாக எழுதி வெளியிட்டு உதவுவார்கள். ஆய்வும் நூல்கள் எழுதுவதும் அவர்களது தொழிலின் முறையான பகுதியாகவே கருதப்படும்.