பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

ஆம். ஒர் ஏழைக்கு எழுத்தறிவித்தல், பல நூற் ருண்டுகளுக்கு, உலக நன்மையாகவே சுரங்து கொண் டிருப்பதை மாஸ்கோ பல்கலைக்கழகத்தைக் கண்டபோது 'உணர்ந்தோம்.

அப் பல்கலைக்கழகத்தை, காரிலேயே சுற்றி வந்தோம். பல கோணங்களில் கின்று ஒளிமயமான மின்விளக்குகளின் அதுணேயால் அதன் எடுப்பான தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தோம். பதிைேரு மணியாகிவிட்டதால் உள்ளே .நுழையவில்லை. ஒட்டலுக்குத் திரும்புவது நல்லது என்றேன். அப்படியே திரும்பிளுேம். வழியிலே, எங்கள் .சிந்தனே, சோவியத் காட்டின் மாணவர்களுடைய போக்கின்மேல் சென்றது.

சோவியத் காட்டு மாணவர்களுக்கு இலட்சியம்' உண்டா? உண்டு. அது என்ன? 'படிப்போம், படிப்போம்! மேலும் மேலும் படிப்போம். இதுவே அவர்களுடைய இலட்சியம். -

இது பல தலைமுறைகளாக வாழையடி வாழையாக வந்ததா? இக் குறிக்கோளை எப்போது பெற்ருர்கள்?

இது பல தலைமுறைகளாக வந்த இலட்சியமல்ல. படிக்கக்கூடாத இனங்கள் இருந்த காலத்தில் இத்தகைய இலட்சியம் வேரூன்றுமா? எல்லோர்க்கும் கல்வி என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டதின் விளைவு இக் குறிக்கோள். இரு தலைமுறைகளாக, இடைவிடாது. பற்றி வரும் குறிக்கோள் இது.

இக் குறிக்கோளே, மாணவச் சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டிய நல்லவர் யாரோ? என்ன பேரோ?

இக் குறிக்கோளைத் தந்த நல்லவர், வல்லவரும் ஆவார். அவர் பெயர் லெனின். சோவியத் ஒன்றியத்தின் தந்தை, புரட்சித் தலைவர், புதிய உலகத்தின் சிற்பி,