பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மாமேதை லெனின் அவர்களே, படியுங்கள், படியுங்கள்! மேலும் மேலும் படியுங்கள்! என்ற புரட்சி மந்திரத்தை வளர்ச்சி மந்திரத்தை சோவியத் மக்களுக்கும் அதன்மூலம் உலக மக்களுக்கும் சொல்லிக் கொடுத்தவர்.

கொடுங்கோல் மன்னராட்சிக் கவிழ்ந்து, மக்களாட்சி ஏற்பட்ட பிறகு, அவ்வாட்சியில் அமைதியைப் பெற, செய்த சூழ்ச்சியா இது? இல்லை. வெறும் அமைதிக்காக ஆட்சியை எளிதாக நடத்திக்கொண்டு செல்வதற்குத் துணையாகக் கண்டுபிடித்த, திசை திருப்பியல்ல, மாமேதை லெனின் அவர்களுடைய கல்வி மந்திரம்.

எதிர்காலத்தை எண்ணி, தன்னுடைய ஆட்சியின் எதிர்காலத்தை மட்டும் கருதாது. நாட்டின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வி மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார், மாவீரர் லெனின். சொல்லிக் கொடுத்தபோது இருந்த சூழ்நிலை என்ன தெரியுமா? o

புரட்சி வெற்றி பெற்று, சமதர்ம ஆட்சி ஏற்பட்டும், நெடுங்காலமாக வறுமை - வாட்டம், அறியாமை, கல்லாமை, இயலாமை, நோய் கொடி இவைகள் அடியோடு அழியாத நில அப்போது. காரணம் என்ன? சமதர்ம ஆட்சியை வேரூன்றவிடக் கூடாதென்று பிற்போக்கு சக்திகள் உள்நாட்டில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருந்தன. வெளியே உள்ள பதின்ைகு வல்லரசுகள், சோவியத் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டன. உட்பகை வெளிப்பகை இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நெருக்கடி. பொதுமக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும்படிச் செய்யவேண்டிய பெரும் பொறுப்பு.

அவ்வமயம் இளைஞர்கள் லெனினைக் கண்டார்கள். சமதர்ம சோவியத் ஆட்சிக்கு உதவுவதில் தாங்களும்