பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

பங்குபெற விரும்புவதாகக் கூறினர்கள். இளேஞர்களுக் கேற்ற புரட்சித் திட்டத்தைக் கொடுக்குமாறு: வேண்டினர்கள்.

அவ்விளைஞர்கள் யார்? மாணவ ம ணி க ள். பாட்டாளிகள் அல்ல. இதைத் தெரிந்துகொண்ட தலைவர் லெனின், முன் கூட்டியே சிந்தித்து, முடிவுசெய்து வைத்துள்ள தமது திட்டத்தை அவர்களுக்கு வெளி பிட்டார்.

'படியுங்கள்! படியுங்கள்! மேலும், மேலும் படியுங்கள்'. இத் திட்டத்தைக் கேட்ட இளைஞர்கள் திகைத்தார்கள், கல்வித் திட்டம்போல் தோன்றும் இது எப்படி பாட்டாளியின் புரட்சித் திட்டமாகுமென்று அவர்கள் திகைத்ததில் வியப்பில்லை.

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப் பெருக்கும், கலைப் பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருட ரெலாம் விழி பெற்றுப் பதவி கொள்வார். இது பாரதியார் கவிதை, லெனின் கொள்கை.

ஆர்வம் மட்டுமே கொண்டு, அனுபவமில்லாத இளேஞர்களுக்கு இது சட்டென்று புரியாததால், அவ் விளைஞர்கள் திகைத்தார்கள். இரத்தம் தெறிக்க ஆணை யிடுவார் என்று எதிர்பார்த்த இளைஞர்களின் ஏமாற்றம் மாமேதை லெனினுக்குப் புரிந்தது.

படிப்பதும் மேலும் மேலும் படிப்பதும், பெரிய தேசியப் புரட்சியின் இணைந்த, இன்றியமையாத பகுதி என்பதை விளக்கினர் லெனின்.

புதிய சமதர்மத் தொழிலாளி ஆட்சியை நடத்திச் செல்ல மூத்த தலைமுறையினரே இருக்க முடியுமா? புரட்சியில் பங்கு கொள்ளும் மூத்தவர்கள் பலர், உயிர் கேப்பிப் பிழைத்தாலும், அவர்களே, நெடுங்காலம் வழி