பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கடத்திச் செல்ல முடியுமா? இளைஞர்கள் காலத்திற்கு முன்னே முதியவர்கள் காலம் முடிந்துவிடும்.

பாட்டாளி சோவியத் ஆட்சியை, காத்து. கல்லபடி கடத்தி, மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வு கொடுக்க வேண்டும். சோவியத் ஆட்சியை அமைப்பது கடினம். அதைக் காத்துப் பயன்படுத்துவது அதை விடக் கடினமாக இருக்கக்கூடும்.

உருவாகியுள்ள சோவியத் ஆட்சியைச் செம்மை யாகவும், நன்மையாகவும் நடத்திச் செல்ல, துறைதோறும், துறை தோறும், பயிற்சி மிக்க, புதிய தலைமுறையினர் தேவை. சமதர்மக் கொள்கைப் பிடிப்புள்ள, அதே நேரத்தில், கல்வியிலும், தொழிற் பயிற்சியிலும் முற்றிய வர்கள் ஏராளமாகத் தேவை. மன்னராட்சிக்குத் தேவைப் படுவோரைவிட அதிகமானவர்கள் மக்களாட்சியின்போது

தேவை.

மக்களாட்சி மலர்ந்ததும், ஆயிரக்கணக்கான பொறி யியல் வல்லுனர்களும், பல்லாயிரக்கணக்கான மருத்துவ மேதைகளும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களும் வேண்டும். அத்தனை மேதைகள் எங்கிருந்து குதிப்பார்கள்? இப்போது முதல், ஆயத்தஞ் செய்தாலே, நல்ல பயிற்சி பெற்ற, மக்களுணர்ச்சியுள்ள நிபுணர்களைப் பெற முடியும். எனவே, சமதர்ம உணர்ச்சியுள்ள இளைஞர்கள் ஆர்வத்தோடு, மளமளவென்று கல்வி பெற்று, புதிய சமதர்ம ஆட்சிக்குத் தொண்டாற்ற ஆயத்தமாகிக் கொள்வதே, அவர்கள் ஆற்றவேண்டிய புரட்சிப் பணி.

இவ்விளக்கத்தைக் கேட்ட இரஷ்ய இளைஞர்கள், முன்னவர்களைவிட அதிக ஆழமாகவும் ஆர்வமாகவும். கல்வி கற்பது. இணயில்லாத நாட்டுத் தொண்டு; புரட்சித் தொண்டு; சமதர்மத் தொண்டு என்பதை உணர்ந் தார்கள்.