பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

சமதர்ம உணர்ச்சியுடையவர்கள், மற்றவர்களைவிட, சிறந்த வல்லுனர்கள் ஆவது, சமதர்மத்துக்கு நெடு. நாளைக்கு உதவும் என்று தெளிந்து அவ்வண்ணம்,

கல்வியில் ஆழ்ந்து ஈடுபட்டார்கள்; ஈடுபடுகிருர்கள்: ஈடுபடுவார்கள்.

லெனின் கற்றுக் கொடுத்த கல்வித் திருமந்திரத்தைப் பற்றி சிறிது சிந்திப்போம்.

s திடீர் விருந்து வந்துவிட்டது. சமையல் அரிசி பூட்டி யிருக்கிறது. சாவியோ அம்மாவிடம் சிக்கிக் கொண்டது. அம்மாவோ தொலைவிலுள்ள கோயிலுக்குச் சென்று இருக்கிருர்கள். சுறுசுறுப்புக்குப் பேர்போன சமையற் காரர், எதிரில் தென்படும், விதை நெல்லே எடுத்து விரைந்து குத்தி சமைத்துவிட்டால் நாளை விதைப்பதற்கு எங்கே போவது?

விதை நெல். கடகைக் கிடைப்பதைவிட, சமையல் அரிசி அக்கம்பக்கத்தில் எளிதாகக் கிடைக்குமே! விதை நெல்லை வீணுக்காமல் அரிசியைக் கடன் வாங்கிக் கொண் டிருந்தால் நன்மையாக இருக்கும்.

இளைஞர்கள், சமுதாயத்தின் விதை நெற்கள். அம். மணிகளைக் கண்ட கண்ட தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்துவது, சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழாக்குவதாகும். மாணவ மணிகளேநம்மைவிட கன்ருக விளைந்து பயன்பட வேண்டிய மணிகளை - இன் றைக்கிருப்பதைவிட சிறந்த நல்ல சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல்களையும் கல்லுணர்ச்சி களேயும் தம்முள் அடக்கி வைத்துள்ள மணிகளே - காத்து வரவேண்டியது. நாட்டின் நலத்தில் அக்கறை உடையோர் கடமை. சமுதாயத் தொண்டர்களின் பொறுப்பு. முற். போக்குக் கருத்துடைய இளைஞர்கள் பொறுக்கு மணிகள்.