பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

கொள்கிறேன். நீங்கள், குறிப்பிட்டபடி நிகழ்ச்சிகளுக்குச் சென்று வாருங்கள்" என்று விடை கொடுத்தேன்.

என்ைேடு யாராவது, துணைக்கு இருப்பது நல்லது என்று கருதப்பட்டது. 轟

எங்கள் தாதுக் குழுவை அழைத்துக் கொண்டு, இரு சோவியத் நண்பர்கள் செல்வதாக இருந்தது. காய்ச்சல் காரனுக்குக் காவல் இருக்க வ்லாடிமீர் முன் வந்தார். அவரை என்ளுேடு விட்டு விட்டுச் சென்ருர்கள்.

,

என் அறையிலேயே உட்கார்ந்து இருந்தால் கான் றங்காமல் பேச முயற்சிப்பேன் என்று எண்ணினர்تعي 'வ்லாடிமீர். எனக்கு முழு ஒய்வு கொடுக்க வேண்டு மென்பதற்காக, வெளி தாழ்வாரத்திற்குச் சென்று அமர்ந்து விட்டார். உள்ளேயே இருக்கலாமென்று, எவ்வளவு வற்புறுத்தியும் பலிக்கவில்லை.

வெளியே உட்கார்ந்திருந்த வ்லாடிமீர், அரை மணிக்கு ஒர் முறை, மெல்ல, அமைதியாக உள்ளே வந்து பார்ப் பார். பலமுறை நான் உறங்குவதைக் கண்டு நிறைவோடு திரும்பியதாக, பின்னர், அவர் மூலம் கேள்விப்பட்டேன்.

சோவியத் நாட்டின் நகரங்களில் பாலிகிளினிக்'குகள் நிறைய உண்டு. எண்ணிக்கை, நகரத்தின் பரப்பைப் பொருத்தது.

ஒவ்வொரு பாலிகிளினிக்கும் எந்தெந்த வட்டாரத் திற்குப் பணிபுரியும் என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. நோய்வாய்ப்பட்டவர் இருக்கும் வட்டாரத்திற்கு உரிய பாலிகிளினிக்கிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும். பாலிகிளினிக்கிலிருந்து, மருத்துவர் உதவியாள ரோடு, நோயாளியைத் தேடிவருவார். அப்படி வருவதற் காக ஒவ்வொரு பாலி கிளினிக்கி லும் வாகனங்கள்