பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

'காய்ச்சல் வந்து விட்டதே இவ்வளவு துாரம் வந்து படுத்துக் கொண்டிருக்க நேர்ந்து விட்டதே' என்று நான் சஞ்சலப்பட்டதை விட, வ்லாடிமீர் பட்ட சஞ்சலம் அதிகம். அதை என்னல் எழுத இயலாது. அவரைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அழாத குறையாக, அவர் என்னே அணுகுவதும் அகலுவதுமாக இருந்தார். பகல் முழுவதும் இப்படியே கழிந்தது.

அன்றுமாலை, என்னைக்கான தமிழ்நாட்டு நண்பர்கள் இருவர் வந்து சேர்ந்தார்கள். பகலில் அவர்கள் என்ைேடு தொடர்பு கொண்ட போது, நான் காய்ச்சலில் படுத் திருப்பதைத் தெரிந்து கொண்ட, திரு. கிருஷ்ணய்யா, தம் வீட்டிலிருந்து அரிசிக் கஞ்சியோடு வந்து சேர்ந்தார். 'குடு குப்பி'யிலிருந்து, தானே ஊற்றிக் கொடுத்த போது சென்னேயிலிருப்பது போன்ற உணர்வு பெற்றேன். அது, சற்று ஆறுதலாக இருந்தது.

கிருஷ்ணய்யா யார் என்று சொல்லவில்லையே. அவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னை சோவியத் நாடு தமிழ்ப் பதிப்பில் தொண்டாற்றி வந்தார். தற்போது, மாஸ்கோவில், முன்னேற்ற வெளியீட்ட”த்தில் தமிழ்த் தொண்டாற்றிக் கொண்டிருக்கிருர். இவ் வெளியீட்டகம், சோவியத் நூல்களே, பிறங்ாட்டு மொழிகளில் பெயர்த்து வெளியிடும். அதில் பங்கு பெற்றிருப்பவர் திரு. கிருஷ்ணய்யா. -

என்னுடைய மற்ருெரு மாஸ்கோ நண்பராகிய திரு. மணிவர்மா, ஒவல்டினேயும் பழங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார். என்னுடன் சில மணிநேரம் இருந்தார். ஒவல்டினையும் பழத்தையும் ஊட்டிவிட்டே வீடு சென்ருர்,

திரு. மணிவர்மா, கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாஸ்கோ வானெலியில், தமிழ் ஒலி பரப்பைக்