பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தார்கள். அந்த மனேயின் "ஆம்புலன்ஸ்' வந்து, என்ன அமுைத்துக்கொண்டு போயிற்று. என்னுடன் வ்லாடிமீர், மணிவர்மா, கிருஷ்ணய்யா ஆகிய மூவரும் வந்தனர்.

நான் மருத்துவமனையில் சேரும்போது, மாலே ஐந்தரை மணி. அங்குள்ள மருத்துவர், உடனே என்னைச் சோதித்தார். ஊசிபோட்டார். மூன்று மாத்திரைகளைக் கொடுத்து விழுங்கச் செய்தார்.

என்ன நன்ருகக் கவனித்துக் கொள்வதாகக் கூறி விட்டு, உடன் வந்த நண்பர்களே வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

'துரதுக்குழு'வில் செல்வோர், மதிப்பிற்குரிய விருந்தி :னர்கள். ஆகவே, எனக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது. அதில் தங்கினேன். இரவுச் சாப்பாடு வந்தது. உண்டு விட்டு உறங்கினேன்.

இரவு ஒன்பது மணிக்கு, மீண்டும் ஊசி போடப் பட்டது. மூன்று மாத்திரைகள் தரப்பட்டன. மறுபடியும் இரவு பன்னிரெண்டு .ணிக்கு, என்ன எழுப்பி மூன்று மாத்திரைகளை விழுங்கச் செய்தார்கள். விழுங்கிவிட்டு

நன்ருக உறங்கினேன். -

காலேயில், மருத்துவர் என்னைச் சோதித்தார். வெப்பம் சாதாரண நிலையில் இருந்தது. மகிழ்ச்சியோடு தெரி வித்தார்.

சோவியத் காட்டில், மருத்துவமனையில் சேர்த்தால், நோயாளிகளே கன்ருகச் சோதித்துப் பார்த்த பிறகே, வெளியே அனுப்புவார்களாம். எ ன க் கு ம் பல சோதனைகள்.

முன்ள்ை ஏற்பாடு செய்திருந்தபடி, கழிவு, நீர், குருதி ஆகிய மூன்றையும் சோதனை செய்தார்கள். அடுத்த காள், மார்பை எக்ஸ்ரே செய்தார்கள். -