பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134.

மருத்துவ வசதி உண்டு. தொலைவில் இருப்போர்க்கு விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ் கிறைய உண்டு. அது மட்டுமா? மருத்துவர்கள் 'ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று நோயாளியைக் குணப்படுத்தவும் தேவைப் பட்டால் ஹெலிகாப்டர் மூலம் பெரிய மருத்துவமனேக்குக் கொண்டு வரவும் விரிவான ஏற்பாடு செய்திருக்கிருர்கள்.

கல்விக்கூடங்களிலும், மருத்துவ சோதனைக்கும் மருத்துவ உதவிக்கும் வசதியுண்டு. நோய் வந்தபிறகு குணப்படுத்துவதைவிட சிறந்தது, கோய் வராதபடி தடுப்பது. எனவே, குழந்தைகளேயும் சிறுவர் சிறுமி களேயும் வாலிபர்களையும் அப்போதைக்கப்போது சோதனை செய்வதன்மூலம் நோயைத் தொட்டக்கத்திலேயே கண்டு பிடித்து, எளிதாகக் குணப்படுத்துகிருர்கள்.

இராணுவ மருத்துவமனைகள் தவிர, பொதுமக்களுக் கான மருத்துவமனைகள் இருபத்தெட்டாயிரம். அவற்றி லுள்ள மொத்த படுக்கைகள், இருபத்து மூன்று இலட்சம். மொத்த மருத்துவர்கள் எவ்வளவு பேர்? ஐந்து இலட்சத்து எண்பதாயிரம் பேர்கள். மேலும், ஆண்டு தோறும், இருபத்தாருயிரம் மருத்துவப் பட்டதாரிகள் வெளி வருகிருர்கள். மருத்துவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் பெண்கள். மக்கள் உயிர் அவர்கள் கையில் பத்திரமாக இருக்கிறதா? ஆம். எப்படித் தெரிகிறது?

சோவியத் காட்டில், ஆண்களின் சராசரி வயது அறுபத்தாறு, பெண்களின் சராசரி வயது எழுபத்து. நான்கு. இவை உயர்ந்துகொண்டே இருக்கிறதாம். வளரட்டும்; வாழட்டும். நமக்கு நல்ல நண்பர்களர் யிற்றே.

இந்தியத் தாதுக்குழு, சோவியத் காட்டிற்குத் சென்றது, அவர்களது கொண்டாட்டத்தில் கலந்து கொள்