பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அதில் கூத்து, கேளிக்கை, சூதாட்டம் எதுவும் கிடையாது. அறிவு கொடுக்கும் கண்காட்சியாக மட்டும் உள்ளது. அதைப் பற்றி, நண்பர்கள் சொன்ன போது எனக்குக் குறையோ ஏக்கமோ தோன்றவில்லை. . ஏன் ? நான், ஏற்கனவே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில் அக் கண்காட்சியைக் கண்டுள்ளேன். அதன் பெருமையை உணர்ந்துள்ளேன். அவர்கள் ஒவ் வோர் ஐந்தாண்டு திட்டத்தின் போதும் எட்டிப் பிடித் துள்ள புதிய குறியீடுகளே அறிந்து வியந்ததோடு நானும் ஊக்கம் பெற்றிருக்கிறேன்.

மாஸ்கோவில் அடுத்த நிகழ்ச்சி, சோவியத் - இந்திய நட்புறவுக் கழகத்தால் கூட்டப்பட்ட பொதுக் கூட்டம். மேற்படி நட்புறவுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இக் கூட்டம் நடந்தது. மண்டபம் நிறையத் தோழர்கள் கூடினர்கள். சோவியத் நாட்டின் பெரியபுள்ளிகள் இரண்டு மூன்று பேர், நாம் செய்து கொண்டிருக்கும் உடன்படிக்கையை ஆதரித்தும், இரு மக்களுக்கிடை யிலும் கட்பும் நல்லுணர்ச்சியும் மேலும் பரவி வளர வேண்டியும் அருமையான உரைகள் நிகழ்த்தினர்.

இந்தியர்கள் சார்பில், மாஸ்கோவில் நம் தாதுவராக உள்ள திரு செல்வங்கர், துதுக் குழுவின் கலேவர் திரு ஹென்றி ஆஸ்டின் ஆகிய இருவரும் உரையாற்றினர். இவர்கள் உரைகளும் நல்ல ஆர்வமுடையனவாக அமைந்தன. *

அவையோர் வேடிக் கைப் பார்க்க வந்தவர்கள் அல்லர். கொள்கைப் பிடிப்பால் அக் கூட்டத்திற்கு வந்தவர்கள்: அவர்கள் அடிக்கடி நீண்ட கையொலியின் மூலமும் ஆர்வமான வாழ்த்தொலியின் மூலமும் இந்திய சோவியத் நட்புறவு வளர வேண்டுமென்னும் தங்கள் அவாவை வெளிப்படுத்தினர்கள்.