பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மேனுட்டார் விருந்து, பானத்தோடு தொடங்கும் அஜெர்பெய்ஜானிலும் அப்படியே.

குடிப்பவர்களுக்கு, இந்தியாவில் எவ்வகையான மது வகைகள் கிடைக்கும் என்று கேட்டார்கள் "பாக்கு தோழர்கள். திகைத்தேன். நண்பர் திரு. அகமத்கான்

துணைபுரிந்தார்.

ஒயின், விஸ்கி, பிராந்தி, அரக் ஆகியவை கிடைக்கும் என்ருர். எதை எதை இங்கே குடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, நாங்கள் மதுவகையே அருந்துவ தில்லை என்ருேம்.

எங்கள், ஒட்கா, கோனியாக் ஆகியவை கொடுக் க ட் டு மா ? அரக் - சாராயம் - வேண்டுமானலும் கிடைக்கும். எங்கள் நாட்டு சாராயத்தைச் சுவைத்துப் பாருங்களேன்' என்று எவ்வளவோ உபசாரம் செய்தார் கள். நாங்கள் பழச்சாற்ருேடு கின்று விட்டோம். நல்ல ஆரஞ்சுப் பழச்சாறு, பெரிய கண்ணுடிப் பாத்திரம் நிறைய இருந்தது. அதை எத்தனைமுறை, எங்கள் 'கிளாளில், ஊற்றிக் குடிக்க வைத்தார்கள், என்ற கணக்கு மறந்து விட்டது. நிறையக் குடித்தோம் - பழச்சாற்றையே.

நல்ல காய்கறி புலாவ், அரிசி, தும்பைப் பூவைப் போல் வெண்மையாகவும் மென்மையாகவும் இருந்தது. மற்றவர்களுக்கு, பலவகை மாமிசக் கறிகள். எனக்கு அருமையான காய்கறிப் பதார்த்தங்கள்.

- ----.

உணவின்போது, கைக்கும் வாய்க்கும் சண்டையை மட்டும் நாம் அறிவோம். அம் மக்கள், உண்டுகொண்டேன் எத்தனையோ பேசுகிருர்கள். அதுமட்டுமா? வாழ்த் துரைகள் பல, உணவருந்தும்போது. உணவருநதும. போது ஒரே கலகலப்பு.