பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

சாப்பாட்டின்போது பாக்குத் தோழர் எங்களை வரவேற்று, எங்கள் நலனுக்காக, எழுந்து கின்று, குடித்து வாழ்த்தினர். குடித்து வாழ்த்துவதற்குப் பெயர் டோஸ்ட் கூறுதல். f நாங்கள் அவர்களுடைய தோழமையை வரவேற்றுப் பாராட்டி, குடித்து வாழ்த்திைேம்.

பழச்சாறு டோஸ்ட் என்ன டோஸ்ட் போங்கள் என்று கிண்டல் செய்தார், பெரியவர். * - அடுத்து அப் பெரியவர், இந்தியாவையும் இந்திய மக்களையும் வாழ்த்தி, அவர்கள் நல்வாழ்விற்காகக் குடித் 'தார். எல்லோரும் சேர்ந்து கொண்டோம்.

பிறகு, அஜெர்பெய்ஜான் குடியரசிற்கும் அதன் மக்க ளுக்கும் நல்வாழ்த்துக் கூறிக் குடித்தார், திரு. அகமத்கான். நான், சோவியத் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இந்தியாவின் - இந்திய மக்களின் நல்வாழ்த்துக்களைக் கூறி, குடிக்க எழுந்து கின்றேன். அனைவரும் எழுந்து கின்று குடித்தோம்.

இப்படி, வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, உண்டு முடிக்க, இரண்டு மணிகள் ஆயின. நல்ல தயிரும் அருமையான பழவகைகளும் உண்டேனே! அதை

நினைக்க நினைக்க இனிக்கிறது.

சாப்பாட்டிற்குப் பிறகு, ஒருமணி நேர ஓய்வு கொடுத் தார்கள். பிறகு நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட் டோம். உள்ளுர் தோழர்கள் இருவர் உடன்வந்தார்கள்.

பாக்கு நகரம், அஜெர்பெய்ஜான் குடியரசின் தலைநகரம். இக் குடியரசு, சோவியத் ஒன்றியத்தில் அடங்கியுள்ள பதினைந்து குடியரசுகளில் ஒன்ருகும். இது பெரிதும் மலைநாடு. இக் குடியரசு பரப்பிலோ, மக்கள்