பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

வாசலுக்குச் சென்ருேம். நாங்கள் சென்றது ரம்சான் மாதத்தில்.

காலணிகளைக் கழற்றி, வெளியே வைத்து விட்டு: பள்ளிவாசலுக்குள் மெல்ல அடியெடுத்து வைத்து நுழைந்தோம். பள்ளிவாசலைச் சேர்ாத ஒருவர், எங்களே மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்ருர். உட் கூடம் இருநூறு முந்நூறு பேருக்குப் போதுமானது.

உள்ளே, ஆள் உயரத்திற்கும் மேலாக அமைக்கப் பட்டிருந்த இருக்கையொன்றில், ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில், விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் மீது, ஐம்பது அறுபது முதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உயர்ந்த பீடத்தில் இருந்தவர், மூச்சு விடாமல் சொற் பொழிவு செய்து கொண்டிருந்தார். பக்தர்கள் மெளன மாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மற்ருேர் பக்கம் கறுப்புத் திரைக்குப் பின்னல், சில பெண்கள் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பழைய முறைப்படி நடப்பதாக இருந்தால், பெண்கள் பள்ளிவாசலுக்குள் வந்து அமரக் கூடாதாம். இப்போது உள்ளே வந்திருப்பது முன்னேற்றமாம். வெளியே, பெண்கள் முகமூடி அணியாவிட்டாலும், பள்ளிவாசலில் திரைக்குப் பின்னல் இருந்தாவது கேட்க உரிமை கொடுத்திருப்பது இன்றைய முற்போக்கின் அடையாளம்.

பள்ளிவாசலுக்குள் நுழைந்த எங்களுக்கு, சுவர் ஒரமாக, நாற்காலிகளைப் போட்டு அமரச் செய்தார்கள். அங்குள்ள குரான் நூல்கள் அடுக்கிலிருந்து, ஒன்றை வாங்கிப் படித்தார், திரு. கான். -

பத்து கிமிடங்கள், அங்கே, புரியாத சொற் பொழிவை, மரியாதையோடு கேட்ட பிறகு, பூனைகள் போல் ஒசைப்படாமல் வெளியே வந்து விட்டோம்.