பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

ருண்டுக்குள், அடிமைகளை வாங்கும் அரசுகள் இரண்டு

ஏறபடடன.

ண்ேட வரலாற்றுக் காலத்தில், இப் பகுதி பல வெளி நாட்டுப் படையெடுப்புகளில் சிக்கிச் சீரழிந்தது. துருக்கியர், பெர்சியர், ரோமர், அரேபியர், அசிரியர் ஆகிய பலருடைய போருக்கும் கொடுமைக்கும் கொள்ளைக்கும் ஆளாகி நலிந்தது. தோற்றபோதும் தோல்வி மனப் பான்மை கொள்ளாது, மீண்டும் மீண்டும் தலைதுாக்கி வளர்ந்தது. சோவியத் ஒன்றியத்தில் முன்னேறிய பகுதி யாக விளங்குகிறது.

பண்டைய படையெடுப்புகளையும் கொடுமைகளையும் அவர்கள் மறைக்கவில்லை.

பாக்கு நகரத்திற்கு அறுபது கிலோ மீட்டர் துரத்தில், கோபிஸ்தான் என்ற பெரிய ஊர் உள்ளது. அதையடுத்துள்ள மலையின் கற்பாறைகளில், பண்டைய வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் சித்திரங்கள் உள்ளன. அச் சித்திரங்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இரண்டாயிரம் ஒவியங்கள் பேசாமற் பேசு கின்றன. அவற்றில் மிகப் பழையவை, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியனவாக இருக்குமென்கிருர்கள் தெரிந்தவர்கள். அதைக் கேட்டபோது நமது சித்தன்ன வாசலும், யானைமலையும் எனக்கு கினேவிற்கு வந்தன.

கோபிஸ்தான் கற்பாறை காட்டும் நடனத் தொடர் முறை, இன்றும் அஜெர்பெய்ஜானில் பின்பற்றப்படு வதாகக் கேள்விப்பட்டோம். -o முற்காலம், இடைக்காலம், இக்காலம் ஆகிய மூன்று. காலங்களிலும் அஜெர்பெய்ஜான் மக்கள் கையாண்ட, பாத்திரங்கள், அணிந்த அணிகலன்கள், உடுத்திய, உடைகள், எடுத்த போர்க் கருவிகள் அனைத்தையும் அக் கண்காட்சியில் காணலாம்.