பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கொள்ள, உயர்மட்ட, கல்லுறவுத் தாதுக்குழு வொன்றை அனுப்பி வைக்கும்படி, இந்தியாவைக் கேட்டுக் கொண் டார்கள். அதே சமயத்தில் அறுவர் அடங்கிய உயர்மட்ட சோவியத் கல்லுறவுத் தூதுக்குழுவொன்றை இந்தியா விற்கு அனுப்பி வைத்தார்கள்.

சோவியத் மக்களின் வேண்டுகோளின்படி இந்தி யாவின் சார்பில், நால்வர் கொண்ட நல்லுறவுக் குழு வொன்று, சோவியத் நாட்டிற்குச் சென்றது. அத் தாதுக் குழுவின் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலர்களில் ஒருவரு மான திரு. ஹென்றி ஆஸ்டின் ஆவர். நாடாளு மன்றத்தின் மேலவை உறுப்பினரான திரு. ரஷித்உடீன் அகமத்கான் மற்ருெரு உறுப்பினர். பீகார் மாநிலத்தின் பொதுப் பணித்துறையின் முன்ள்ை அமைச்சர் திரு. ராம் லக்கான்சிங் யாதவ், மற்ருெரு உறுப்பினர். நானும் அத்துாதுக்குழுவில் ஒருவன்.

குழுவின் தலைவர் திரு. ஆஸ்டின் அவ்வமயம் ஐரோப் பாவில் சுற்றுப் பயணஞ் செய்து கொண்டிருந்தார். எனவே, எங்களை மாஸ்கோவில் சந்தித்து, எங்களுக்கு தலைமை தாங்க ஒப்புக் கொண்டார். நாங்கள் மூவரும் நவம்பர் மூன்ரும் நாள் பிற்பகல், டில்லியிலிருந்து, ஆப்கானிய வானவூர்தியின் மூலம், காபூல் சென்றடைங் தோம். அங்கு அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள், அங்கிருந்து, டாஷ்கண்டிற்குச் சென்ருேம். காலை பத்து மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் மாலை மூன்று மணிக்குப் புறப்பட்டது. ஏன் ? காபூலுக்கும் டாஷ் கண்டிற்கும் இடைவெளியில் இருந்த வானிலைக் கோளாறு. கால தாமதமானலும், பத்திரமாக, டாஷ் கண்ட் போய்ச் சேர்ந்தோம். டாஷ்கண்ட் - ஆம் அது எத்தனே எத்தனை எண்ணங்களையோ எழுப்புகின்றது.