பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*" |--

o

153

நாட்களும் எல்லா நேரமும் எரிந்து கொண்டே இருக்குமாம். இவ்வணையா விளக்கு க ள் எப்படி எரிகின்றன? எண்ணெய் ஊற்றி எரிவிக்கவில்லை. இயற்கை ஆவியின் மூலம் எரிகின்றன.

இப் பகுதியில் பல இடங்களில் பூமிக்கடியிலிருந்து இயற்கை ஆவி பொங்கி வருகிறது. அதைக் குழாய்களின் மூலம், பல இடங்களுக்குக் கொண்டு சென்று. எரி பொருளாகப் பயன்படுத்துகிருர்கள். அத்தகைய ஆவிக் குழாயை அந்த ஐந்து பந்தங்களுக்கும் இணைத்திருக் கிருர்கள். இடையருது வந்து கொண்டிருக்கும் ஆவியினல் விளக்குகள் ஐந்தும் என்றும் எப்போதும் எரிகின்றன. அதற்கான செலவை, சோவியத் ஆட்சி ஏற்றுக் கொள்ளுகிறது.

சாதாரணமாக நெருப்பாலயம் பார்சிகளுக்குரியது. நெடுங்காலத்திற்கு முன்னர், இவ்வட்டாரத்தில் பார்சியர் குடியிருந்ததாகக் கேள்வி. அக்காலத்தில் பார்சியர் நெருப்பாலயம் அமைத்திருக்கக் கூடும்.

பிற்காலத்தில், அதாவது பத்தொன்பதாம் நூற் ருண்டில் இந்திய வணிகர்கள் சிலர், இவ்வூரில் குடியேறி வாணிபஞ் செய்தனர். சிறந்த இரத்தினக் கம்பளங்கள், வாசனைப் பொருட்கள், பொன் நகைகள் ஆகியவற்றில் அவர்கள் வாணிபஞ் செய்தார்களாம். -

இந்திய வணிகர்கள், வடபகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் காலத்தில் இக் கோயில் இந்துக்கள் கோயிலாக மாறியதாகக் கருதலாம.

நாற்புறமும் உயர்ந்த மதிற்சவர்களே உடையது இக் கோயில். மதிற்கவரை ஒட்டி, பல அறைகளைக் கட்டி யுள்ளார்கள் அவ் வணிகர்கள். அவை, பயணிகளோ,

வணிகர்களோ தங்கும் உறையுட்களாக அக் காலத்தில்

சோ-10