பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154.

பயன்பட்டன. எல்லா அறைகளேயும் இன்றும் பத்தி, மாகப் பாதுகாத்து வைத்துள்ளார்கள். அக் கோம் லுக்குள், பதின்மூன்று 'சாசனங்கள்' பதிக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் பன்னிரண்டு சமஸ்கிருதத்தில் உள்ளன: ஒன்று பெர்சிய மொழியில் உள்ளது. அதே, மாக எல்லாமே சுருக்கமானவை.

பல சாசனங்கள், ஒவ்வொரு அறையையும் கட்டிய வர்களைப் பற்றி பேசுகின்றன. சில இறைவழிபாடுகளாக அமைந்துள்ளன.

ஒவ்வோர் சாசனத்திற்கு அடியிலும் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இரஷ்ய மொழி பெயர்ப்பையும் எழுதி வைத்துள்ளது சோவியத் ஆட்சி. பழைய சாசனங்களைப் பாதுகாப்பதோடு, அவற்றிற்கு மொழிபெயர்ப்புகளும் எழுதி வைத்து உதவும் ஆட்சியின் பெருந்தன்மை என்னே!

அறைகளில் ஒன்றில் பூசைப் பொருட்களைக் கண்டோம். திரிசூலம் உள்ளது. சிறிய மணி உள்ளது. தட்டு இருக்கிறது. தீபாராதனைக்குரியதும் பத்திரமாக இருக்கிறது. பெரிய பெரிய சிலைகளேயும் கோணிப் பைக்குள் சுருட்டி கப்பலேற்றிவிடும் வல்லவர்கள் உள்ள நாட்டிலிருந்து சென்ற எனக்கு, சின்னஞ்சிறு பூசைப் பொருள்களேக்கூட பாதுகாத்து வைத்திருக்கும் பாங்கு வியப்பை ஊட்டிற்று. திகைத்து கின்றேன். என்னே யறியாமலேயே நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்தது.

'வேலு நேரமாகிவிட்டது. நகருக்குத் திரும்ப வேண்டுமே வாருங்கள் போவோம்' என்று கூறி தோழர்கள் என்னே வெளியே அழைத்து வந்தார்கள்.

நந்தா விளக்குகளே உடைய இந்த ஜோதி ஆலயத் தில் பூசாரிகள் இல்லை. காவற்காரர் உண்டு. அதுபோக: