பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 157

எனவே, மக்கள் பிரதிநிதிகளாயிருந்து, சில காலம் H * - - + + - ஆண்டவர்கள் பாக்குவை விட்டு வெளியேற நேரிட்டது. ఆi డిr ஏற்றிச் சென்று, ஏமாற்றி சுட்டுக் கொன் ருர்கள். அப்படி கட்டுக் கொல்லப்பட்ட இருபத்தாறு பிரதிநிதிகளுக்கு, நினைவுச்சின்னம் அமைத்துள்ளார்கள். அங்கே, எந்நேரமும் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. :மக்கள் பயபக்தியோடு, அமைதியாகச் சென்று தலை தாழ்த்திவிட்டு வருகிருர்கள். நாள்தோறும் பலர் மலர் வளையங்களே வைக்கிருர்கள். -

காங்களும் அந்தப் புனித பூமிக்குச் சென்று, எங்கள் வணக்கத்தைச் செலுத்திவிட்டு வந்தோம். - பாக்குவின் ஆட்சி, மீண்டும் சோவியத் ஆட்சியின் "கைக்கு வந்தது. அப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய படைத்தலைவர், கிரோவ் என்பார். அவருடைய முழு உயரச்சிலையொன்றை, நகரின் பெரிய குன்றின்மீது அமைத்திருக்கிருர்கள். அந்த இடத்தையும் அழகாக வைத்துக் காக்கிருர்கள். அதையும் கண்டோம்.

நாங்கள் பாக்குவிற்குச் சென்றது சோவியத் இந்திய கட்புறவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக. அக் கொண்டாட்டத்திற்காக, ஒர் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். நல்ல கூட்டம் வந்திருந்தது, கூட்டத்தில், சோவியத் இந்திய உடன்படிக்கையை ஆதரித்து, இரு சார்பிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. உரைகளுக்கு நல்ல வரவேற்பு. கூட்டம் முடிந்ததும், கலே நிகழ்ச்சி அதே இடத்தில் கடந்தது. அஜெர்பெய்ஜான் இசை, கருவி இசை, கூத்து ஆகியவற்றைக் கேட்டும் கண்டும் மகிழ்ந்தோம். அஜெர்பெய்ஜான் கலைஞர் ஒருவர், நேருவைப்பற்றி உணர்ச்சிமிக்க பாடல் ஒன்றைப் பாடி அவையோரைப் பரவசப்படுத்தினர். அவர் இந்தியா வுக்கு வந்து போனவராம்.