பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

அஜெர்பெய்ஜான் குடியரசு எண்ணெய் ஊற்து களுக்குப் பெயர் போனது. முற்காலத்தில் இவ்வூந்து களிலிருந்தே, பெரும்பாலான இரஷ்ய எண்ன்ெ: கிடைத்தது. இப்போது, வேறு சோவியத் பகுதிகளிலும் எண்ணெய் ஊற்றுகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்: அங்கும் எண்ணெய் எடுக்கிருர்கள். ஆ யி அம். அஜெர்பெய்ஜான் எண்ணெய்க் கிணறுகளும் விடாது இறைக்கப்படுகின்றன. இங்குள்ள எண்ணெய் மிக உயர்ந்த ரகம் என்று சொல்லப்படுகிறது.

இந்த எண்ணெய் ஊற்றுகளைக் காணச் சென்ருேம். பாக்குவிற்கு முப்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அமைப்புகளைக் காட்டினர்கள். அந்த அமைப்புக்குப் பொறுப்பாளராயிருப்பவர், முன்னர் இந்தியாவில் இருந் தவர். நம் நாட்டு எண்ணெய் ஊற்றுகளைக் கண்டு காட்டு வதற்காக, இந்தியப் பேரரசுக்கு தனி அதிகாரியாக இருந்தவர்.

நூற்று ஐம்பது கிணறுகளிலிருந்து எண்ணெய் இறைப்பதாகக் கூறினர். எவ்வளவு ஆழத்தில் எண்ணெய் கிடைக்கிறது? கரையோரத்தில், மூவாயிரத்து ஐ.நாறு மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறதாம். கிலத்தின் ஆழத்தில் மட்டுமா எண்ணெய் எடுக்கிருர்கள்? இல்லை. கடலுக்கு அடியிலிருந்தும் எண்ணெயை எடுப்பதாக விளக்கினர். அங்கே எவ்வளவு ஆழத்தில் எண்ணெய் கிடைக்கிறது: ஐயாயிரம் மீட்டர் ஆழத்தில், கடலுக்கு அடியில் எண்ணெய் ஊற்றுகள் உள்ளனவாம். நடுக்கடலில், ஆழத் தோண்டப்பட்ட எண்ணெய்க் கி ண று க ளி லி ரு ந் து குழாய்கள் மூலம் எண்ணெயை மேலே கொண்டுவந்து சுத் திகரிப்பு ஆலைக்குக் கொண்டு செல்கிருர்கள். எண்ணெய் இறைப்பது, அதன் பாய்ச்சலைக் கணக்கிடுவது, ஒழுங்குபடுத்துவது ஆகிய பல பணிகள் மின்சாரத்தின் துணையால் நிகழ்கின்றன.