பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இங்கே, தலைமை அதிகாரியின் பதின்ைகு மாத சம்பளத்தைச் சேர்த்தால்தான், சாதாரண காரே வாங்க் முடியும். ---

அஜெர்பெய்ஜான் பல்கலைக்கழகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. பாக்கு சென்றடைந்த பிறகே பல்கலைக்கழகத்தைப் பார்க்கும் விருப்பத்தைத் தெரிவித்தோம். குறுகிய அறிவிப்பிலேயே, பல்கலைக்கழக துணைவேந்தரும் சில பேராசிரியர்களுமாகச் சேர்ந்து, எங்களுக்குப் பேட்டி தந்தனர். முதலில் பலமான சிற்றுண்டியைப் பரிமாறி விட்டு, பேச்சுக் கொடுத்தனர்.

அஜெர்பெய்ஜானில், ஜார் ஆட்சிக் காலத்தில் பல்கலைக்கழகமோ உயர் கல்வி கிலேயமோ இல்லை. உயர் நிலைப்பள்ளிகளாவது ஏராளமாக இருந்தனவா ? இல்லே. அவையும் சிலவே.

அக்டோபர் புரட்சிக்கு முன்பு, பதினேந்து உயர்நிலைப் பள்ளிகளே இருந்தன. தொடக்கப்பள்ளிகளும் ஆயிரத்தை நெருங்கின. அவ்வளவே. விளேவு. பரவலான தற்குறித் தன்மை. இருபது மருத்துவர்களும் பன்னிரண்டு பொறி யியலாருமே அன்றைய சாதனே. அந்தப் பகுதியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர்கள் இருநூற்று ஐம்பத்து இரண்டு பேர்களே ஆவர். இவ்வளவு : புறக்கணிக்கப்பட்டிருந்த பகுதியில் இன்று எல்லோர்க்கும் கல்வி வசதி எட்டுகிறது. எல்லா வகையான கல்வியும் எல்லார்க்கும் எட்டுகிறது. போதுமான அளவு கல்விக் கூடங்கள் உள்ளன என்று சொல்லலாம். இன்று ஐயா யிரத்து நானுாற்று தொண்ணுாற்று ஒன்று பொதுக் கல்விப் பள்ளிகள் உள்ளன. பொதுக் கல்விக் கூடங்களில் நல்ல தொழிற் பயிற்சி உண்டு. அது போக, எழுபத்து, எட்டு தொழிற் கல்விக் கூடங்கள் உள்ளன.