பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பிறக்கும் போது, கல்வி பெறுவோர் வரிசையில் சேர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது, -- அஜெர்பெய்ஜான் பல்கலைக்கழகம், ேசா வியத் ஆட்சியின் குழந்தை. பல்கலைக்கழகத்தின் வயது ஐம்பத்து. ஒன்று. ஆயிரத்து கொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு. பல்கலைக்கழகத்தின் பொன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய போது வராமற் போய்விட்டீர்களே என்று. வருந்தினர் துணைவேந்தர்.

இப் பல்கலைக்கழகத்தில் கற்போர் எண்ணிக்கை. பதின்ைகாயிரம். இதில் ஐயாயிரம் பேர்களே முழு நேரம் படிக்கிருர்கள். பகுதி நேரப் படிப்பு முறையும் அஞ்சல் முறையும் சேர்ந்து ஒன்பதாயிரம் பேருக்கு மேல். கல்வி அளிக்கின்றன.

இப் பல்கலைக்கழகற்தில் முப்பத்தாறு பாடப் பிரிவுகள் உள்ளன.

இதற்கு நல்ல பெரிய கட்டடம் இருக்கிறது. நல்ல. நூல் நிலையம் இருக்கிறது. பயன்படுத்துகிருர்களா? ஆம். பன்னிரண்டாயிரம் மாணவ மாணவியர் நூல்களை வீட்டுக்குக் கொண்டு போய் படிக்கின்றனர்.

இப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களும் படிக்கிருர்கள். இந்திய மாணவர்களையும் அனுப்பி வையுங்கள் என்று வேண்டிக் கொண்டார், துணைவேந்தர். அவருக்கும் அவரது சகாக்களுக்கும் நன்றி கூறி விட்டு, விடை பெற்றுக்கொண்டோம்.