பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MiG

அஜெர்பெய்ஜான் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பி, வந்த போது, எங்கள் பேச்சு, சோவியத் நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பற்றியே தொடர்ந்தது.

இன்று, கல்வியில் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் : இருப்பதோடு நிறைவு கொள்ளாமல், மேலும், வளர்க்க, தரமானதாக்க, முயல்கிறீர்கள் ; நீங்கள் ஆதியில் கல்வியில் மிகப் பின்னடைந்து இருந்தது உண்மை. அறியாமைச் சுவரைத் தகர்த்தெறிந்து எப்படி விடுபட் டீர்கள் ? என்று,பாக்கு நண்பர்களைக் கேட்டோம்.

' கல்வியில் எங்கள் முந்திய நிலை படுமோசமானது. இந்த காட்டின் சில பகுதிகள், ஒரளவு கல்வி பெற்றபொது மக்களைக் கொண்டிருந்தன. பல பகுதிகள், தற்குறித் தன்மையில் மூழ்கித் தத்தளித்தன. நாடு முழுவதையும் சேர்த்துக் கணக்கிடும் போது, நூற்றுக்கு இருபத்தைந்து பேர்களுக்கே எழுதப் படிக்கத் தெரியும். மற்ற எழுபத்தைந்து பேர்களோ, கண்ணிருந்தும், படிக்கக்