பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

டங்களுக்கிடையிலும், கல்வித் தேவையை அலட்சியப் படுத்தவில்லே அந்த மாவீரர். அறிவே எத்தகைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆணிவேர். அறிவை,

கல்வியாலேயே பெற முடியும்.

' எழுத்தறிவில்லாதவர், அரசியல் அப்பாவி. அத்த கைய அப்பாவிகளைக் கொண்டு, மக்களாட்சியை, பாட் டாளி ஆட்சியை, பாட்டாளிகளால், பாட்டாளிகளுக்காக, நடத்த இயலாது. எனவே சோவியத் ஆட்சி, பல்வேறு பணிகளுக்கிடையிலும் முதியோர் எழுத்தறிவுப் பணிக்கு முதலிடம் தர வேண்டும். படிக்காத முதியவர்கள் அனைவருக்கும் படிக்கச் சொல்லித் தருவதிலே முனைப் பையும் விரைவையும் காட்ட வேண்டும், என்று தலைவர் லெனின் கூறினர். அப்படியே. முடிவு செய்தார்கள். நல்ல முடிவுதானே !' என்ருர் பாக்கு தோழர்.

வல்ல முடிவே ! அதை நிறைவேற்ற எத்தனை பாடு பட்டிருக்க வேண்டும் !" என்று பாராட்டினேம்.

ஆம். பெரும்பாடு. சில ஊர்களிலா? இல்லை. எல்லா ஊர்களிலும் ; நாடு முழுவதிலும் பெரும்பாடு. முன்னறியாப் பெரும்பாடு, ஒராண்டு வரையிலா? ஈராண்டு வரையிலா? பத்துப் பன்னிரண்டு ஆண்டு களுக்குத் தொடர்ந்து பாடுபட வேண்டியதாக இருந்தது.'

பாக்கு தோழரின் பேச்சில் குறுக்கிட்டோம்.

ஏன், அத்தனை ஆண்டுகள் பிடித்தன ' என்று கேட்டோம். ஏதோ அதைவிட விரைவில் அந்த அளவு சாதனையைச் செய்து முடித்தவர்கள் போல.

" அந்த நாள், எங்கள் காட்டில் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ள:வேண்டிய நிலையில் இருந்த, முதியவர்கள் பல கோடி பேர்கள். பத்துப் பன்னிரண்டு கோடி பேர் களாக இருக்கலாம்.