பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

' பழைய வேலையை யாரும் விடவில்லை. அவற்றில் இருந்தபடியே, அவற்றையும் செய்து கொண்டு கூடுதல் நாட்டுத் தொண்டாக, ஒய்ந்த நேரம், முதியோர் கல்விப் பணியில் ஈடுபட்டார்கள், தொண்டர்கள்.' --

முதியவர்கள் தாமே கல்வி கற்க வந்தார்களா ? எல்லோரும் தாமே வந்தவர்கள் அல்லர். அவர்களே பள்ளிக்கூடத்திற்கு இட்டுவரவும் முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்களே முதியோர் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு, பெரிதும் 'கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தது. ஆண்களைப் பொறுத்த வரையில் எளிதாக வெற்றி பெற்ருர்கள்.

உள்ளூரில் உயர்நிலைப்பள்ளியோ தெ ா ட க் க ப் பள்ளியோ இருந்தால், அங்கேயே மாலே நேரம் முதியோர் பள்ளிக்கூடம் நடந்தது. பள்ளிக்கூடமே இல்லாத ஊரில், எங்கே கூடிக் கற்ருர்கள் ?

ஊர்ப் பொது மன்றங்களிலோ தொழிற்சங்கக் கட்டடங்களிலோ ஆலயங்களிலோ முதியோர் பள்ளி நடந்தது.

பெண்களும் முதியோர் பள்ளிக்கு வந்தார்களா ? அநேக இடங்களில் இல்லை. ஏன் ? அக்காலத்தில் சோவியத் காட்டின் பல ஊர்களில் பெண்கள் முகமூடி யணியும் முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவ்வூர், களில், பெண்கள் முதியோர் பள்ளிக்கு வர ந. னினர். அதனுல் அவ்வூர் பெண்களே. தற்குறிகளாகவே விட்டு விட்டார்களா ? இல்லை. பெண்கள், பள்ளிக்கு வரக் கூடாத பழக்கம் வேரூன்றியிருந்த இடங்களில், பள்ளிக் கூடங்கள் பெண்களே நாடிச் சென்றன. அதாவது பெண். தொண்டர். இடங் கொடுக்கிற ஏதாவதொரு பெண் மணியின் வீட்டிலேயே அவ் வீட்டின் பெண்மணிகளுக்கும்