பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

அக்கம் பக்கத்து அம்மைகளுக்கும் பாடஞ் சொல்லிக் கொடுப்பார், வெறும் எழுத்தறிவு தாய்மார்களேக் கவராது. எனவே, அவர்களது பாடங்கள். குழந்தை வளர்ப்பை, சமையல்கலையை, தையல்வேலையை மைய மாகக் கொண்டு அமைக்கப்பட்டன. எல்லோர்க்கும் எழுத்தறிவு கொடுக்கும் பெரும்பணியில், சோவியத் முன்னேடிகள் கையாண்ட உபாயங்கள் இவை.

முதியோர் எழுத்தறிவிப்பு இயக்கம் சோவியத் நாடு முழுவதும் முளைத்தது. வளர்ந்தது. படர்ந்தது. வீடு தோறும் கலையின் விளக்கம் கண்டனர். ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக எழுத்தறிவு பெற்ருர்கள்.

பெற்ற எழுத்தறிவு, பெருமையின் சின்னம் மட்டுமா? தொடர் கல்வியின் கருவியுமா? தொடர்கல்வியின் கருவியாகவும் பயன்பட்டது: படுகிறது; இனியும் பயன் படும். -

மாணவர் என்ருல், சின்னஞ்சிறு வயது முதல் காளைப் பருவம் வரையில் மட்டும் நம் மனக்கண் முன் தோன்றும். ஏன்? அதுவே நம் நாட்டுச் சூழ்நிலை.

சோவியத் நாட்டில், 'மாணவர் என்ற சொல் பல பருவத்தினரையும் அணேத்துக் கொள்கிறது. அங்காட்டில் ஏழு வயதுப் பையனேயும் பெண்ணேயும் குறிப்பது போலவே, எழுபது வயது தாத்தாவையும் அந்த வயதுப் பாட்டியையும் சுட்டிக் காட்டும். சிறுவர் சிறுமியர் படிப்பது எவ்வளவு சாதாரணமோ அவ்வளவு சாதாரணம் தாத்தா பாட்டி படிப்பதும்.

. சோ-11