பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

சிறுவர் சிறுமியர் முழு நேரம் படிப்பர். முதியவர்: களோ, உழைப்பாளிகள். எனவே அவர்கள் முழுநேர் மாணவர்களாக இருக்க முடியாது. பாட்டாளிகளாகி விட்டதால், படிப்புக்குத் தேவையற்றுப் போவதில்லை. சாந்துணையும் கற்றல் எல்லோர்க்கும் நல்லது. ฯล களுக்குத் துணையாக கல்வி வழிகள் இரண்டினே வகுத் துள்ளது, சோவியத் கல்வி முறை. அவ்வழிகள் எவை? பகுதிநேரப் படிப்புமுறை ஒன்று. அஞ்சல்வழிப் படிப்பு மற்ருென்று.

கல்விக்கூடங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு, பகுதி நேரப் படிப்பு. அப் பகுதி நேரம், மாலே நேரமாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை; காலே நேர மாகவும் இருக்கலாம். பகுதி நேரக் கல்விக்கூடங்கள் பல. இருவேளை வேலை செய்கின்றன. காலே ஷிப்டுக்கு ( &லக்குப் போவோர் மாலே கல்விக்கு வருவார்கள். மாலை வுப்டில் வேலை செய்வோர். காலையில் கல்விக்கூடஞ் செல்வார்கள்.

கல்விக்கூடங்களுக்குத் தொலேவில் குடியிருந்தாலோ அல்லது பணிபுரிந்தாலோ, அத்தகையோர் அஞ்சல் வழிக் கல்விக்குத் தங்களைப் பதிந்து கொள்வார்கள். கல்விக் கூடம் பாடங்களே எழுதி அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும். மாணவ மாணவிகள், பாடநூல்களின் துணை யையுங்கொண்டு, உரிய பாடங்களைக் கற்றுக் கொள் வார்கள். பாடங்களே எழுதி அனுப்பும்போதே அவை பற்றிய கேள்விகளையும் எழுதி அனுப்புவார்கள். மாணவர்கள், கேள்விகளுக்கான பதில்களே எழுதி, அஞ்சலில், ஆசிரியருக்கு அனுப்புவார்கள். ஆசிரியர், அவற்றைத் திருத்தி அனுப்புவார். இப்படி கல்வி வளரும்.