பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

எடுத்துக்கொண்ட பயிற்சியின் தன்மைக்கு ஏற்ப மாறு: படும். சில பயிற்சிகளுக்கு ஆண்டிற்கு இரண்டு வாரம் வந்து போனல் போதும். வேறுவகையான பயிற்சிகளுக்கு ஆண்டிற்கு இரண்டுமுறை வர நேரிடலாம். ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று வாரங்கள் தங்கிக் கற்க வேண்டியதாகலாம்.

தொழிலை விட்டுவிட்டு, இப்படி வந்து போனல், பிழைப்பு என்ன ஆவது? பயணச் செலவிற்கு பணத்தை எங்கே தேடுவது?

படிப்பதற்காக, கல்விக்கூடத்திற்கு வந்து போகும் தொழிலாளியின் அல்லது அலுவலரின் வேலைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது. மாருக, சம்பளத்தோடு விடுமுறை உண்டு. அதுமட்டுமா? பயணச் செலவிற்கு நிதி உதவிசெய்யும் வகையில் அவர்களது தொழில் விதிமுறைகள் அமைந்துள்ளன. * -

கல்விக்காக தான் செலவு செய்வதற்குப் பதில், தனி நபருக்கு இத்தனை சலுகைகள் கொடுத்தால், கல்வியை மலிவாகக் கருதி, படிப்பில் ஏைேதானே என்று இருந்து விடமாட்டார்களா?

சோவியத் நாட்டின் அனுபவம் அப்படி இல்லை.

முழுநேரக் கல்விக்கூடங்களில் சேர்பவர்களில, பது சிலர், நீரோட்டத்தோடு மிதப்பவர்களாக இருக்கக்கூடும். பகுதிநேர மாணவர்களாயினும் சரி, அஞ்சல்வழிக் கற்ப வர்களாயினும் சரி மிதப்பவர்கள் அல்ல. ஆர்வத்தால் உந்தப்பட்டு ந்ேதுபவர்கள். தொழில் புரிந்த அலுப்பையும் பாராது கல்வி கற்க வருபவர்களுக்கு ஆர்வமும் அதிகம், பொறுப்பும் அதிகம்; எனவே அவர்கள் தேர்ச்சி, மற்ற வர்கள் தேர்ச்சியைவிட அதிகமாகவும் தரமாகவும் இருக்கிறது.