பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

பற்றுகிறது. பொது விவகாரங்களே, அனுபவம் முதிர்ந்த் பெரியவர்களிடம் விட்டு விட்டு, தங்கள் பணியாகிய கல்வியிலே கருத்தைச் செலுத்துகிருர்கள், சோவியத்

LDЛГ680Г6]/ITESSE Grг.

இப்படி அவர்களை நல்வழிப்படுத்தியது, நாட்டின் தந்தை மாவீரர் லெனின் ஆவார்கள் என்று சோவியத் மக்கள் பெருமையோடு கூறக் கேட்டோம். பெரியவர் லெனின் என்ன சொன்னர் ?

படியுங்கள், படியுங்கள், மேலும் மேலும் படியுங்கள். இதுவே மாணவர்கள் ஆற்ற வேண்டிய காட்டுத் தொண்டு என்று லெனின் கூறி, மாணவ உலகத்தைச் சரியான பாதையில் திருப்பிவிட்டார்.

அன்று முதல் இன்று வரை சரியான பாதையிலேயே பெரு நடைபோடும் மாணவர்களைப் பாராட்டினேம். பாராட்டாமல் இருக்க முடியுமா ? -

ஏமாந்த காலத்தே ஏற்றங் கொண்ட பல முதலாளித்துவ நாடுகளோடு தாங்கள் போட்டியிட்டு, தாக்குப் பிடித்து முன்னேறவேண்டுமென்பதை சோவியத் இளைஞர்கள் உணர்ந்திருக்கிருர்கள் என்று கேட்டுப் பூரித்தோம்.

காற்பது ஐம்பது ஆண்டுகளாக மாணவர்களே மாணவர்களாகவே இரு ங் து படிக்கும்படி, ஒரு மனப்படுத்தி வந்ததால், இருநூறு ஆண்டுகளாக விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் வளர்ந்து விட்ட நாட்டையும் மிஞ்சும் சாதனைகளே சோவியத் அறிஞர்கள் செய்து காட்ட முடிந்தது என்று, சோவியத் முன்னேற்றத்திற்கு, தோழர்கள் விளக்கங் கூறியது எவ்வளவு உண்மை ! m o - *

இந்தியாவும் இனியே முன்னேற வேண்டும். அந்த முன்னேற்றம் இளைஞர் கைகளிலே, அவர்களின் அறிவுப்